Tuesday, May 24, 2016
people who displaced by landslide in Thavalanthenna in 2014 still seek solution
in 2014 , there were 58 families displaced due to rock falling and land slide in Thavalanthenna ,Nuwara Eliya District. Then, the people shifted to the temporary sheltors and lived a year. meanwhile, if the government tokk action to build houses for these affected people it didn't happen properly. after that the housing project was abandoned even if the land was allocated for the affected people. Therefore people have gone to their original places and have been living. time to time these Estate people are displacing during the rainy period. நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட தவலந்தன்ன வேவண்டன் தோட்டத்தில் பாரிய கற்பாறை உடைந்து மண்சரிவு அபாயம் நேர்ந்துள்ளது.
இந்த மண்சரிவு 2014 ஆரம்பமானது. பகுதி பகுதியாக ஏற்பட்டு வரும் மண்சரிவினால் அக்காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான 58 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வெவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பின் இவர்கள் தற்காலிகமாக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டு ஒரு வருட காலமாக தங்கி இருந்தனர்.
இக்காலப்பகுதியில் இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை முறையாக நடைபெறவில்லை. இதனால் இந்த மக்கள் தற்காலிக கூடாரங்களை கைவிட்டு விட்டு பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு திரும்பினர்.
அக்காலப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுக்கான தளமும் வெட்டப்பட்டது. குறிப்பிட்டவர்களுக்கு தகரம், சீட் வகைகளும் வழங்கப்பட்டன.
குறித்த காலப்பகுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது.
இதனால் மேற்படி மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதுடன் மலையகத்தில் எற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் நாளாந்தம் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது.
மேற்படி மக்களுக்கு வீடுகளை அமைத்து அவர்களை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் எந்த ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்காமை வருத்தத்திற்கு உரியதே. தற்போதம் சிலர் தற்காலிக வீடுகளில் தங்கி வருகின்றனர்.
இந்நிலைமை தொடர்பாக பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களிடம் வினவிய போது, அய்யா எங்களை காப்பாற்றுங்கள். நாங்கள் இரவு வேளைகளில் கல் வரும் என்ற அச்சத்தில் நித்திரை இன்றி வாழ்ந்து வருகின்றோம்.
கைக்குழந்தைகள், சிறுவர்கள், வயது முதிர்ந்தோர் உட்பட நாங்கள் அனைவரும் பயத்துடன் கல் வந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றோம். தற்போதும் நாளாந்தம் கற்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்போது எவரும் எங்களை பார்க்க வருவதில்லை.
வருடங்கள் 3 கடந்த போதும் இதுவரைக்கும் எங்களுக்கு எந்த விதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. பலர் வந்தனர் அதை செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று என்னென்னவோ கூறிய போதும் ஒன்றுமே நடைமுறையில் இல்லை.
குறிப்பிட்ட 3 வருட காலப்பகுதிக்குள் நாங்கள் 4 முறை மண்சரிவு அபாயம் ஏற்பட்டு பாடசாலைக்கும், தற்காலிக குடியிருப்புக்கும் மீண்டும் வீடடுக்குமாக மாறி மாறி வாழ்ந்து வருகின்றோம்.
தற்பொழுது மலையகத்தில் பல்வேறு விதமான வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றையாவது எமக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
400 landslides incidents were reported during the last two weeks
கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது என தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் ஆய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கண்டி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிறுவனத்தின் அதிகாரிகள் கேகாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும், அவர்கள் மண்சரிவு அபாயம் குறித்து ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குருணாகல், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்து நிலைமைகளின் அடிப்படையில் ஆபத்து கூடிய ஆபத்து குறைந்த என இரண்டு வலயங்களாக இந்தப் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரண்டு வார காலப்பகுதியில் 400 மண் சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.என். பண்டார கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கேகாலை, அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய, தெரணியகல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
48 people displaced due to subsidence in Pilimathalawa ,Giragama Estate in Kandy Distrrict
48 people displaced due to subsidence in Pilimathalawa ,Giragama Estate in Kandy Distrrict.
பிலிமத்தலாவ கிராகம தோட்டத்தில் நிலத்தாழ் இறக்கம்! 48 பேர் இடப்பெயர்வு
கண்டி, பிலிமத்தலாவ பிரதேசத்திற்குட்பட்ட கிராகம தோட்டத்தில் பாரிய நிலம் தாழ் இறக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த பகுதியிலுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த அனைவரும், பிள்ளை பராமறிப்பு நிலையங்களிலும் தோட்ட உத்தியோகஸ்த்தர் குடியிருப்புக்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Posts (Atom)